உயர் பாதுகாப்பு வலயத்தினுள் உள்ள
யாழ். பலாலி இராஜ இராஜேஸ்வரி அம்மன் ஆலயத்தில் விசேட பூஜை வழிபாடுகள் இடம்
பெற்றன.
குறித்த அம்மன் ஆலயத்தில் கடுமையான கட்டுப்பாடுகளுடன் விசேட தினங்களில் மாத்திரம் ஆலயத்திற்கு செல்வதற்கு அனுமதி வழங்கப்பட்டிருந்தது.
இந்நிலையில்
ஞாயிற்றுக்கிழமை முதல் குறித்த ஆலயத்திற்கு தினமும் சென்று
வழிபாடு செய்வதற்கு இராணுவத்தினர் அனுமதி வழங்கியுள்ளனர்.
இனிவரும் நாட்களில் மக்கள் சுதந்திரமாக ஆலயத்துக்கு சென்று வழிபட முடியுமென்றும் இராணுவத்தினர் தெரிவித்துள்ளனர்.
மேலும் நாடாளுமன்ற உறுப்பினர் க. இளங்குமரன் இராணுவ உயர் அதிகாரிகள் உள்ளிட்டோர் விசேட பூஜை வழிபாடுகளில் கலந்து
கொண்டனர்.