வைத்தியரும், யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான இராமநாதன் அர்ச்சுனாவின் பேச்சுகள் முகம்சுழிக்க வைக்கும்படியாக இருப்பதாக யாழ் மக்கள் கருத்து வெளியிட்டுவருகின்றார்கள்.
தமிழ் மக்களால் பெரிதும் மதிக்கப்படுகின்ற ஒரு முக்கியஸ்தரை, தன்னுடையதும் தனது தோழியுடையதும் சிறுநீரை அருந்தும்படி கூறிய அர்ச்சுனாவின் பேச்சுக்கள், ஒரு மதத்தைக் கேவலப்படுத்திய பேச்சுக்கள், வைத்தியசாலைப் பணிப்பாளர் தன்னை ‘சேர்’ என்றுதான் அழைக்கவேண்டும் என்று அர்ச்சுனா அடம்பிடித்த உரையாடல்கள், ‘அண்ணா’ என்ற வார்த்தையை சொச்சைப்படுத்தும்படியான அவரது உரையாடல்கள், ‘தொத்துரொட்டி அடிப்பேன்’ என்று அவர் பேசிய கெட்டவார்த்தைகள் இப்படி சமூகவலைத்தளங்களில் வைரலாகிவருகின்ற நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனாவின் பேச்சுக்கள் அவருக்கு வாக்களித்து அவரை நாடாளுமன்றம் அனுப்பி வைத்த யாழ் மக்களை வெட்கித் தலைகுனிய வைத்துள்ளதாக சாவகச்சேரியைச் சேர்ந்த ஒரு ஊடகவியலாளர் எம்மிடம் தெரிவித்தார்.
‘மற்றவர்களுடன் வலிந்து தொலைபேசி உரையாடல்களை மேற்கொண்டு, அவர்களைத் தூண்டி பேசவைத்துவிட்டு, அந்த தொலைபேசி உரையாடல்களை இரகசியமாக ஒலிப்பதிவுசெய்து வெளியிட்டுவரும் கேவலமான செயல்களை செய்துவருகின்ற அர்ச்சுனாவின் செயல் வருந்தத்தக்கது.
அவருக்கு வாக்களித்து நாடாளுமன்றம் அனுப்பிவைத்ததற்காக வெட்கப்படுகின்றோம்..’ என்று கூறினார் யாழ் வைத்தியசாலையில் பணியாற்றும் ஒரு வைத்தியசாலை ஊழியர்.
வைத்தியரும், யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான இராமநாதன் அர்ச்சுனா பேசி சமூகவலைத்தளங்களில் தற்பொழுது வைரலாகி வருகின்ற சில சொல்லாடல்களை கீழே இணைக்கப்பட்டுள்ள காணொளியில் காணலாம்.
https://www.youtube.com/embed/_5n4g9ODNSA