ஜெயிலர்
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் கேரியரில் அதிக வசூல் செய்த திரைப்படமாக ஜெயிலர் வலம் வருகிறது. கடந்த 2023ஆம் ஆண்டு வெளிவந்த இப்படத்தை இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கியிருந்தார்.
சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவான இப்படத்திற்கு அனிருத் இசையமைத்திருந்தார். மேலும் இப்படத்தில் ரஜினியுடன் இணைந்து ரம்யா கிருஷ்ணன், வசந்த் ரவி, விநாயகன், சிவராஜ்குமார், மோகன்லால், ஜாக்கி ஷ்ராஃப் ஆகியோர் நடித்திருந்தனர்.
இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வசூலில் சாதனை படைத்தது. முதல் பாகத்தின் வெற்றியை முன்னிட்டு இரண்டாம் பாகத்தை எடுக்க திட்டமிட்டுள்ளார்.
வெறித்தனமான அப்டேட்
இந்நிலையில், படம் குறித்து ஒரு அதிரடி அப்டேட் வெளியாகி உள்ளது. அதாவது, ஜெயிலர் படத்தின் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு மார்ச் முதல் தொடங்கும் என்றும், படத்தின் புரோமோ படப்பிடிப்பு சமீபத்தில் எடுத்து முடிக்கப்பட்டுள்ளது.
எனவே விரைவில் புரோமோவுடன் ஜெயிலர் 2 படம் குறித்து அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகும் எனவும் சொல்லப்படுகிறது.
ரஜினியுடன் கூலி, எப்படி உள்ளது தெரியுமா?.. ஸ்ருதிஹாசன் ஓபன்
மேலும், இப்படத்தில் Kgf படத்தின் கதாநாயகி ஸ்ரீநிதி நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. இதனால், படத்தின் மேல் உள்ள எதிர்பார்ப்பு ரசிகர்களுக்கு அதிகரித்துள்ளது.