ஜப்பானுக்கு வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு “ஒரு நாள் மாணவர்” என அழைக்கப்படும் ஒரு புதிய திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
பாடசாலையை விட்டு விலகி மீண்டும் பாடசாலை செல்ல விருப்பப்படுவர்கள் ஒரு நாள் பள்ளியில் படிப்பதற்கான வாய்ப்பை ஜப்பானிய அரசு உருவாக்கியுள்ளது.
இந்தநிலையில், ஜப்பானின் சிபா ப்ரிபெக்சரில் உள்ள ஒரு பழைய பள்ளியில் இந்த நிகழ்ச்சி நடைபெறுகிறது.
கற்றல் நடவடிக்கைகள்
குறித்த பள்ளியில் மாணவராக ஒரு நாளைக் கழிக்கலாம் எனவும் இந்த திட்டத்தின் கீழ் ஒரு பகுதியாக கையெழுத்து, கட்டானா சண்டை, உடற்கல்வி மற்றும் பல கற்றல் நடவடிக்கைகள் போன்ற பல செயல்பாடுகளை அனுபவிக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்தோடு, பாடசாலை சீருடையில் பள்ளிக்கு வருகை தர வேண்டுமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுற்றுலாத் துறையை ஊக்குவிப்பதே இதன் நோக்கம் என்பதுடன் ஜப்பானில் உள்ள கலாச்சாரம் மற்றும் கல்வி முறைகளுக்கு வெளிநாட்டவர்களுக்கு அறிமுகப்படுத்துவதற்கும் இது முக்கியத்துவம் அளிப்பதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.