மோட்டார் சைக்களில் சுமார் 6 மணிநேரம் பயணித்து முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை சந்திக்கச் சென்ற தம்பதியினர் அண்மையில் ஊடகங்களில் பேசுபொருளாக மாறியிருந்தனர்.
அவர்கள், குருநாகல் கல்கமுவ பகுதியில் இருந்து தங்காலைக்கு மோட்டார் சைக்களில் பயணித்து முன்னாள் ஜனாதிபதியை சென்று பார்வையிட்டும் இருந்தனர்.
அதன்படி, மகிந்த மீதான பாசத்தால் இவ்வாறு மனைவியுடன் சென்றதாக கூறிய நபர், கல்கமுவ பிரதேச சபையைச் சேர்ந்த ஒரு பெக்கோ இயக்குநர் என்று தெரியவந்துள்ளது.
பறிபோன வேலை
இந்த நிலையில், அவர் முன்னாள் ஜனாதிபதி மகிந்தவை சந்தித்து திரும்பிய பிறகு அவரின் பெக்கோ இயக்குநர் வேலை வேறு ஒருவருக்கு வழங்கப்பட்டுள்ளதாக செய்திகள் மூலம் தெரியவருகிறது.

அத்துடன், குறித்த வேலை மீண்டும் பெறுவதற்காக கடிதம் கோரப்பட்டபோதும் அது கிடைக்கவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், இது தொடர்பான பணிப்புரை உயர் மட்டத்தில் இருந்து வந்தாக கூறப்பட்டுள்ளது.

