முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

வடக்கில் அரச நிர்வாக செயற்பாடுகளுக்குள் ஜேவிபியின் தலையீடுகள் அதிகரிப்பு

வடக்கு மாகாண பனை அபிவிருத்தி தலைவர் தெரிவில் ஜே.வி.பியின் தலையீடு காணப்படுவதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

பனை அபிவிருத்திச் சபையின் தலைவராக இரு வாரங்களுக்கு முன்னர் நியமிக்கப்பட்டிருந்த இ.செல்வினை மாற்றுவதற்கு ஜே.வி.பியின் யாழ். மாவட்ட அமைப்பாளர் சந்திரசேகரன் தலைமையில் முயற்சிகள் இடம்பெறுகின்றன என்றும் சுரேஷ் பிரேமச்சந்திரன் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

தலையீடுகள் 

இந்நிலையில், பனை அபிவிருத்திச் சபையின் புதிய தலைவராக வி.சகாதேவன் இன்று (30.10.2024)
புதன்கிழமை கடமைகளைப் பொறுப்பேற்கவுள்ளார்.

வடக்கில் அரச நிர்வாக செயற்பாடுகளுக்குள் ஜேவிபியின் தலையீடுகள் அதிகரிப்பு | Jvp Involved In North Government Actions

இதேவேளை, வடக்கில் அரச நிர்வாகச் செயற்பாடுகளுக்குள் ஜே.வி.பி கட்சியினரின் தலையீடுகள்
அதிகரிப்பதாக பரவலான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.

குறிப்பாக வடக்கு மாகாண ஆளுநராக நா.வேதநாயகன் தனது பொறுப்புக்களை ஏற்றதையடுத்து,
வடக்கு மாகாண ஆளுநருக்கும் அரச உயர் அதிகாரிகளுக்கும் இடையிலான கலந்துரையாடல் ஒன்று ஆளுநர் செயலகத்தில் இடம்பெற்றிருந்தது.

யாழ். பல்கலைக்கழக விவகாரம்

இதில் ஜே.வி.பியின் யாழ். மாவட்ட அமைப்பாளர் சந்திரசேகரம் உட்பட கட்சியின் உறுப்பினர்கள் அந்தச்
சந்திப்பில் கலந்துகொண்டிருந்தமை பலத்தை சர்ச்சைகளை ஏற்படுத்தியிருந்தன.

வடக்கில் அரச நிர்வாக செயற்பாடுகளுக்குள் ஜேவிபியின் தலையீடுகள் அதிகரிப்பு | Jvp Involved In North Government Actions

அதன் பின்னர் யாழ்ப்பாணத்துக்கு விஜயம் மேற்கொள்ளும் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க யாழ். பல்கலைக்கழகத்துக்கும் விஜயம் செய்யவுள்ளார் என்ற செய்தியை ஜே.வி.பி. கட்சியினரே நேரடியாகச் சென்று பல்கலைக்கழக நிர்வாகத்திடம் தெரிவித்திருக்கின்றனர்.

அரச பல்கலைக்கழகம் ஒன்றுக்குள் ஜனாதிபதியின் வரவை உறுதிப்படுத்த வேண்டியது ஜனாதிபதி செயலகத்தினரா? அல்லது அவர் சார்ந்த கட்சியினரா? என்ற ஒரு கேள்வியை விரிவுரையாளர் பலரும் முன்வைத்திருக்கின்றனர்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.