முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

நீதிமன்றில் சரணடைந்தார் அம்பிட்டிய சுமணரட்ன தேரர்

தமிழ் மக்களுக்கு எதிராக இனவாத கருத்தை வெளியிட்ட சம்பவம் தொடர்பான வழக்கில் நீதிமன்ற பிடியாணை பிறப்பிக்கப்பட்ட அம்பிட்டிய சுமணரத்ன தேரருக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு மேல் நீதிமன்றத்தில் இன்று புதன்கிழமை (17) சரணடைந்ததை அடுத்து அவரை ஒரு இலட்சம் ரூபா இருவர் கொண்ட சரீர பிணையில் செல்ல அனுமதித்து உத்தரவிடப்பட்டுள்ளது.

மேலும், குறித்த வழக்கை 2026 ஜனவரி 20ம் திகதி நீதிபதி ஒத்திவைத்தார்.

 நீதிமன்றில் வழக்கு தாக்கல்

அம்பிட்டிய தேரர் கடந்த 2023-10-23 திகதி ஊடகங்களுக்கு வழங்கிய செவ்வியின் போது வடக்கில் உள்ள தமிழ் மக்களையும் தெற்கில் உள்ள தமிழ் மக்களையும் வெட்டிக் கொல்ல வேண்டும் என தெரிவித்தார்.

நீதிமன்றில் சரணடைந்தார் அம்பிட்டிய சுமணரட்ன தேரர் | Ambitiya Sumanaratne Thero Surrenders To Court

தேரர் தெரிவித்த இனவாத கருத்துக்கு எதிராக 2023-10-27ம் திகதி கொழும்பு புறக்கோட்டை காவல் நிலையத்தில் சட்டத்தரணி தனுக்க றனஞ்சக என்பவர் முறைப்பாடு செய்ததுடன் சிவில் மற்றும் அரசியல் தொடர்பான சர்வதேச உடன்படிக்கையின் கீழ் உள்ள சட்டத்தின் அடிப்படையில் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்திருந்தார்.

குறித்த வழக்கு தொடர்பாக சட்டமா அதிபருக்கு கோப்புக்கள் அனுப்பப்பட்ட நிலையில் கடந்த மாதம் சட்டமா அதிபர் திணைக்களம் தேரரை கைது செய்யுமாறு அறிவுறுத்தல் வழங்கியது.

நீதிமன்றில் சரணடைந்தார் அம்பிட்டிய சுமணரட்ன தேரர் | Ambitiya Sumanaratne Thero Surrenders To Court

இந்நிலையில் குறித்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட நிலையில் இது தொடர்பில் அவரை கைது செய்யுமாறு 15.12.2025 மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றம் பிடியானை பிறப்பித்து வெளிநாடு பயணத்தடை விதித்தமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்