முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

கருணாவின் கட்சிக்குள் பிளவு: ஊழல் தொடர்பில் குற்றச்சாட்டு

தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணி கட்சி ஊழல் நிறைந்தது என அக்கட்சியின் முன்னாள் உப தலைவர் ஜெயா சரவணா குற்றம் சுமத்தியுள்ளார்.

தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியில் இருந்து விலகியமை தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலே இவ்வாறு தெரிவித்துளடளார்

அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

முக்கியமான ஒரு முடிவு

அரசியல் பயணத்தில் முக்கியமான ஒரு முடிவை அறிவிக்க வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு
தள்ளப்பட்டுள்ளேன். தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் உப தலைவர் பதவியில்
இருந்தும் அக் கட்சியின் அடிப்படை உரிமை பதவியில் இருந்தும் கடந்த 17.08.2024
அன்று விடுவித்து கொண்டுள்ளேன்.

கருணாவின் கட்சிக்குள் பிளவு: ஊழல் தொடர்பில் குற்றச்சாட்டு | Karuna Amman Split The Party Jaya Saravana Left

அக்கட்சியில் நீண்ட தூரம் என்னால் பயணிக்க
முடியாது என்பதனை புரிந்து கொண்டேன்.

போரினால் பாதிக்கப்பட்டு தமது அன்றாட வாழ்க்கைக்கு மற்றையவர்களிடம் கையேந்தும்
நிலமைக்கு தள்ளப்பட்டிருக்கும் தமிழ் மக்களின் பொருளாதாரம், மேம்பாடு அவர்கள்
வாழ்க்கை தரத்தை உயர்த்துவது என்பவற்றை கருத்தில் கொண்டு ஆரம்பித்த பயணம்
இன்று பல கோடிக்கணக்கான பணத்தை இழந்து நிற்க வேண்டிய சூழ்நிலைக்கு
தள்ளப்பட்டுள்ளோம்.

அங்கே நிதி மோசடிகளும், ஊழல்களும் வீண்விரயங்களும் செய்யப்பட்டு நிதிகள்
இல்லாது ஒழிக்கப்பட்டுள்ளது.

நிதிமோசடி

ஊழல் நிறைந்த அக்கட்சியில் இருந்து என்னால் எனது
பயணத்தை தொடர முடியாது இருப்பதாலேயே இம் முடிவு எடுக்கவேண்டிய நிர்ப்பந்தம்.

நிதிமோசடிக்கு அந்த கட்சியின் தலைவர் விநாயக மூர்த்தி முரளிதரனும்(கருணா அம்மான்), அவரினை
சுற்றியிருக்கும் சமூகவிரோத கும்பல்களும் முழுப்பொறுப்பு கூறவேண்டும் .

கருணாவின் கட்சிக்குள் பிளவு: ஊழல் தொடர்பில் குற்றச்சாட்டு | Karuna Amman Split The Party Jaya Saravana Left

ஒரு கட்சியினை எப்படி வழிநடத்த வேண்டும் என தெரியாமல் மிலேச்சத்தனமான போக்கில்
செயற்பட்டு கொண்டிருக்கும்போது ஜனநாயக பாதையில் மக்களின் தேவையை, மக்களின்
அன்றாட வாழ்கைக்கு எப்படி உதவுவது என்பதனை புரிந்து கொள்ள தெரியாத நிலையில்
ஒருவட்டத்திற்குள் என்னால் செயற்படமுடியாது.

எனக்கு பலபக்கங்களிலும் இருந்து நிறைய அழுத்தங்கள் , அச்சுறுத்தல்கள் வந்து
கொண்டு இருக்கின்றன. இருப்பினும் எனது மக்கள் சேவை அன்பின் இல்லம் அறக்கட்டளை
சேவை மூலமும்,தொடரும்.

இதுரை நான் எவரிடமும் ஒரு சதம்
கூட கேட்கவும் இல்லை, பெறவும் இல்லை .முழுநிதியும் என்னுடைய சொந்த உழைப்பில்
எனது கையால் செலவிடப்பட்டது” என்றார்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.