கஜகஸ்தானில்(Kazakhstan)விபத்துக்குள்ளான அஜர்பைஜான் ஏர்லைன்ஸ் விமானத்தின் வால் பகுதியில் ஏவுகணை பகுதிகளில் தாக்கியதற்கான அறிகுறிகள் இருப்பதாக தெரிவித்துள்ளமை பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அஜர்பைஜான் ஏர்லைன்ஸ் எம்ப்ரேயர் 190 விமானம் நேற்று முன் தினம்(25) பாகுவில் இருந்து ரஷியாவின் குரோஸ்னி என்ற இடத்திற்கு சென்றபோது அடர் பனிமூட்டம் காரணமாக 3 இடங்களில் திருப்பிடிவப்பட்டு கடைசியாக கஜகஸ்தானின் மேற்கில் உள்ள அக்டாவ் விமான நிலையம் அருகே வந்துகொண்டிருந்தபோது கீழே விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
இந்த விமானத்தில் 62 பயணிகள் மற்றும் ஐந்து விமான பணியாளர்கள் பயணித்த நிலையில் அதில் 38 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளதுடன் 28 பேர் உயிர் பிழைத்துள்ளனர்.
ரஷ்யா மீதான டிரோன் தாக்கல்
இதன்போது, விமானம் விபத்து தொடர்பாக விசாரணை நடைபெற்று வரும் நிலையில், ரஷ்யாவின் ஏவுகணை எதிர்ப்பு அமைப்பு அல்லது நிலத்தில் இருந்து ஏவப்படும் ஏவுகணை ஆகிவயற்றில் ஏதாவது ஒன்று தவறுதலாக தாக்கி இந்த விபத்து ஏற்பட்டிருக்கலாம் என உலகின் பல்வேறு ஊடகங்கள் மற்றும் செய்தி நிறுவனங்கள் சந்தேகத்தை வெளியிட்டுள்ளன.
Very interesting: Shrapnel marks on the fuselage of Azerbaijan Airlines plane that crashed in Kazakhstan today. pic.twitter.com/3X5PTIR66E
— Clash Report (@clashreport) December 25, 2024
உக்ரைன் தற்போது ரஷ்யா மீது டிரோன் தாக்கல் நடத்தி வருகிறது. இதனால் டிரோன் ஆக இருக்கலாம் என ரஷ்யாவின் ஏர் பாதுகாப்பு நிலையம் தகவல் தெரிவித்து அதன்மூலம் விமானம் தாக்கப்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது.
கிரோஸ்னி விமான நிலையத்தில் தரையிறக்க விடுக்கப்பட்ட வேண்டுகோள் நிராகரிக்கப்பட்ட பிறகு சிறிது நேரத்தில் வெளியே மிகப்பெரிய வெடிச்சத்தம் கேட்டதாக உயிர்பிழைத்தவர்களில் சிலர் தெரிவித்துள்ளனர்.
மேலும் அஜர்பைஜானி மற்றும் அமெரிக்க அதிகாரிகள், ரஷ்யாவின் மேற்பரப்பில் இருந்து வான் ஏவுகணையால் தான் விபத்து ஏற்பட்டதாக ஜெட் நம்புகின்றனர்.
ரஷ்ய ஏவுகணை தாக்குதல்
அரசு சார்பு அஜர்பைஜான் இணையதளமான காலிபர். Pantsir-S வான் பாதுகாப்பு அமைப்பில் இருந்து ஏவப்பட்ட ரஷ்ய ஏவுகணை விமானத்தை வீழ்த்தியதாக அஜர்பைஜானி அதிகாரிகளின் கூற்றை மேற்கோள் காட்டி உள்ளது. இதே கூற்றை நியூயார்க் டைம்ஸ், யூரோநியூஸ் மற்றும் துருக்கிய செய்தி நிறுவனமான அனடோலுவும் தெரிவித்துள்ளன.
இந்நிலையில், விபத்து தொடர்பான கட்டுக்கதைகளை உருவாக்க வேண்டாம் என ரஷ்யா எச்சரித்துள்ளதுடன் ரஷ்ய அதிபர் மாளிகையின் செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் செய்தியாளர், விசாரணையின் முடிவுகள் வருவதற்கு முன் யூகங்களை உருவாக்குவது தவறானது.
BREAKING: Passenger plane crashes near Aktau Airport in Kazakhstan pic.twitter.com/M2DtYe6nZU
— BNO News (@BNONews) December 25, 2024
நாங்கள் நிச்சயமாக இதைச் செய்ய மாட்டோம், யாரும் இதைச் செய்யக்கூடாது. விசாரணை முடியும் வரை காத்திருக்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே கஜகஸ்தான் துணைப் பிரதமர் கனாட் போசும்பாயேவ், விசாரணை இன்னும் ஆரம்ப கட்டத்தில் இருக்கும் போது யாரையும் குற்றம் சாட்ட வேண்டாம் என்று அறிவுறுத்தியுள்ளார்.
விமான விபத்து நடைபெற்ற இடத்தில் இருந்து கருப்பு பெட்டி கண்டெடுக்கப்பட்டு ஆய்விற்கு அனுப்பப்பட்டுள்ளது. அதில் உள்ள ஆடியோ கேட்கப்பட்ட பின்னர்தான் விபத்துக்கான முழு விவரம் தெரியவரும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.