கிளிநொச்சி (Kilinochchi) – முரசுமோட்டை முருகானந்தா கல்லூரியில் சுமார் 5.5 மில்லியன்
ரூபாய் செலவில் நிர்மாணிக்கப்பட்ட 1139 அடி நீளமான சுற்றுமதில் கையளிக்கும்
நிகழ்வும் பிரதான நுழைவாயிலுக்கான அடிக்கல் நாட்டு நிகழ்வும் இடம்பெற்றுள்ளன.
குறித்த நிகழ்வுகள், இன்று (13.09.2024) நடைபெற்றுள்ளன.
கிளிநொச்சி மாவட்டத்தின் கல்வி, விளையாட்டு என பல்வேறு துறைகளிலும்
முன்னேற்றமடைந்து வருகின்ற ஒரு பாடசாலையாக காணப்படும் கிளிநொச்சி
முருகானந்தா கல்லூரியின் கல்வி சார்ந்த நடவடிக்கைகள் மற்றும் பௌதீக வள
தேவைகள் குறித்த பிரதேசத்தைச் சேர்ந்த புலம்பெயர்வாழ் உறவுகளால்
மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அடிக்கல் நாட்டும் நிகழ்வு
அந்த வகையில், முரசுமோட்டை ஒன்றியத்தின் பிரித்தானியா கிளை ஊடாக சுமார் 5.5
மில்லியன் ரூபாய் செலவில் பாடசாலையை சூழவுள்ள பகுதிக்கான 1139 அடி
நீளமான சுற்றுமதில் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.
அதனை உத்தியோகபூர்வமாக பாடசாலை
நிர்வாகத்திடம் கையளிக்கின்ற நிகழ்வும் பாடசாலை பிரதான நுழைவாயிலில்
அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு நிகழ்வும் இன்று நடைபெற்றுள்ளது.
இந்நிகழ்வில் கிளிநொச்சி வடக்கு வலயக்கல்வி பணிப்பாளர் அ.சிவனருள்ராஜா, முரசுமோட்டை ஒன்றியத்தின் பிரித்தானிய கிளையின் தலைவர் மயில்வாகனம் மதியழகன், செயலாளர் சண்முகம் தயாபரன், பொருளாளர் அமிர்தலிங்கம் குமணன் மற்றும் யோகேஸ்வரன்
சுதர்ஷினி நல்லையா கிருபாகரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டுள்ளனர்.