களுத்துறை – பேருவளை பகுதியில் தொடருந்தில் மோதி ஒருவர் உயிரிழந்துள்ளதாக பேருவளை தொடருந்து நிலைய பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
களுத்துறையில் இருந்து நேற்று இரவு பெலியத்தை நோக்கிப் பயணித்த விரைவு தொடருந்திலேயே ஒருவர் மோதி உயிரிழந்துள்ளார்.
இவ்வாறு உயிரிழந்தவர் பேருவளை சிறிநிவாச பகுதியில் வசிக்கும் 51 வயதுடைய நபர்
எனத் தெரியவந்துள்ளது.
வைத்தியசாலையில் அனுமதி
சம்பவத்தில் உயிரிழந்தவர் தொடருந்து கடவையை அண்மித்துப் பயணித்துக்கொண்டிருந்த
வேளை விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

விபத்தில் படுகாயமடைந்து பேருவளை
வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், உயிரிழந்தாக தெரிவிக்கப்படுகின்றது.
Source: https://tamilwin.com/article/killed-in-train-collision-in-1724505375

