சூப்பர்ஸ்டார் ரஜினி கெரியரில் முக்கிய ஹிட் படங்களில் ஒன்று படையப்பா. அதில் சிவாஜி கணேசன், ரம்யா கிருஷ்ணன், சௌந்தர்யா உள்ளிட்ட பலர் நடித்து இருந்தனர்.
கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் 1999ல் வெளியான இந்த படம் அப்போதே 58 கோடி ரூபாய்க்குள் மேல் வசூலித்தது.
கே.எஸ்.ரவிக்குமார் சம்பளம்
படையப்பா படத்திற்காக இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார் எவ்வளவு சம்பளம் வாங்கினார் என தெரியுமா? 65 லட்சம் ரூபாய் தான்.
அந்த பணத்தை கொண்டு ரவிக்குமார் ஒரு இடத்தை வாங்கினாராம். அந்த இடத்தில் தான் தற்போது ரவிக்குமார் பிரம்மாண்டமாக வீடு கட்டி வாழ்ந்து வருகிறார்.