ஒரு மடிக்கணினி காரணமாக கொழும்பில் உள்ள ரஷ்ய தூதரகத்தில் வெடிகுண்டு அச்சமொன்று ஏற்பட்டதாக தெரியவந்துள்ளது.
வெளிநாட்டவர் ஒருவர் மடிக்கணினி ஒன்றை தூதரகத்திற்கு வழங்கி விட்டு அவசரமாக வெளியெறியதன் காரணமாக இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
அதன் காரணமாக சிறப்பு அதிரடிப்படை, சிறப்பு அதிரடிப்படையின் வெடிகுண்டு செயலிழக்கும் பிரிவு மற்றும் கறுவாத்தோட்ட காவல்துறையினர் உள்ளிட்ட தரப்பினரை உடனடியாக தூதரகத்திற்கு வரவழைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
மேலதிக விசாரணை
எனினும் நடத்தப்பட்ட சோதனைகளின் போது, அவ்வாறு வெடிகுண்டு எதுவும் கண்டு பிடிக்கப்படவில்லை.

இந்த நிலையில், சம்பவம் தொடர்பாக கறுவாத்தோட்டம் காவல்துறையினர் மேலதிக விசாரணைகள் மேற்கொண்டுள்ளனர்.

