சணச ஆயுள் காப்பீட்டு நிறுவனத்திற்கு நீண்டகால காப்பீட்டு வணிகத்தை மேற்கொள்வதற்கான உரிமம் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது.
டிசம்பர் 5 ஆம் திகதி இலங்கை காப்பீட்டு ஒழுங்குமுறை ஆணையத்தால் பிறப்பிக்கப்பட்ட உத்தரவின்படி இது நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொழில் ஒழுங்குமுறைச் சட்ட விதிகள்
2000 ஆம் ஆண்டு 43 ஆம் எண் காப்பீட்டுத் தொழில் ஒழுங்குமுறைச் சட்டத்தின் பிரிவுகள் 18(1)(d), (f), (g) மற்றும் (h) ஆகியவற்றின் கீழ் இலங்கை காப்பீட்டு ஒழுங்குமுறை ஆணையம் இந்த இடைநிறுத்தத்தை விதித்ததாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

காப்பீட்டாளர் சட்டப்பூர்வ தேவைகள் அல்லது ஒழுங்குமுறை நிபந்தனைகளை மீறிய சந்தர்ப்பங்களில் மேற்குறிப்பிட்ட சட்டப் பிரிவுகள் பொருந்தும்.
இந்த உத்தரவு டிசம்பர் 5 ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் எனவும் மேலும் சட்டத்தின் பிரிவு 18(2) இன் படி மூன்று வார காலத்தை உள்ளடக்கிய டிசம்பர் 26 ஆம் திகதி வரை நடைமுறைக்கு இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த இடைநிறுத்தத்திற்கான காரணங்கள் குறித்து நிறுவனம் கூடுதல் விவரங்களை வழங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும்.

