முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

வடக்கு மாகாணத்தில் 4 மாவட்டங்களில் வெள்ள அபாயம்

வடக்கு மாகாணத்தில் மன்னார், யாழ்ப்பாணம் கிளிநொச்சி, முல்லைத்தீவு ஆகிய
மாவட்டங்களின் தாழ்நிலப் பகுதியில் உள்ள மக்கள் வெள்ள அபாயம் தொடர்பில்
அவதானமாக இருப்பது அவசியம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

குறிப்பாக, குளங்களின் கீழ்ப் பகுதிகளில்
வசிக்கும் மக்கள் மிக அவதானமாக இருப்பது அவசியம்.”

– இவ்வாறு யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் புவியியல் துறை தலைவரும் காலநிலை
ஆய்வாளருமான பேராசிரியர் நா. பிரதீபராஜா எதிர்வு கூறியுள்ளார்.

இது தொடர்பில் அவர் வெளியிட்ட காலநிலை அவதானிப்பு அறிக்கையில்,

“நாட்டின் தென்கிழக்கே நிலவும் காற்றுச் சுழற்சி மற்றும் தென்மேற்கு பகுதியில்
நிலவும் வளிமண்டல தளம்பல் நிலை காரணமாக தற்போது கிடைத்து வரும் மழை நாளை வரை
தொடரும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

மக்கள் அவதானம்.. 

வடக்கு மாகாணத்தின் பல இடங்களிலும் பல மணித்தியாலங்களுக்கு மேலாக மழை கிடைத்து
வருகின்றது. தொடர்ந்தும் கன மழை கிடைக்கும் வாய்ப்புள்ளது. குளங்கள் பலவும்
வான் பாய்கின்றன. ஆறுகளும் அவற்றின் கொள்ளளவை எட்டியுள்ளன.

வடக்கு மாகாணத்தில் 4 மாவட்டங்களில் வெள்ள அபாயம் | Flood Threat In 4 Districts In Northern Province

ஆகவே, மன்னார்,
யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களின் தாழ்நில பகுதியில் உள்ள
மக்கள் வெள்ள அபாயம் தொடர்பாக அவதானமாக இருப்பது அவசியம்.

குறிப்பாக
குளங்களின் கீழ்ப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் மிக அவதானமாக இருப்பது அவசியம்.

குறிப்பாக, யாழ்ப்பாணம் மாவட்டத்துக்கு தொடர்ந்து சில மணி நேரங்களுக்கு கனமழை
கிடைக்கும் வாய்ப்புள்ளது.

ஆகவே, யாழ்ப்பாணம் நகரை அண்மித்த தாழநிலப்பகுதி
மக்கள், ஏனைய தாழ் நிலப்பகுதிகளில் பகுதிகளில் உள்ள மக்களும் அவதானமாக
இருப்பது சிறந்தது.

வெள்ள நிலைமைகளை அவதானித்து முன்கூட்டியே பாதுகாப்பான
இடங்களுக்குச் செல்வது சிறந்தது.

மன்னார் மாவட்டத்துக்கு நீரை கொண்டு வரும் பாலியாறு, பறங்கியாறு போன்றவற்றின்
நீரேந்து பிரதேசங்களில் மழை கிடைத்து வருகின்றது.

எனவே, இந்தப் பகுதிகளில்
உள்ள மக்களும் அவதானமாக இருப்பது அவசியம். கிழக்கு மாகாணத்தின் பல
பகுதிகளுக்கும் நாளை வரை கனமழை தொடரும்.

மத்திய, தென், ஊவா, சப்ரகமுவ மாகாணங்களிலும் மழை தொடர்ந்து கிடைக்கும்
வாய்ப்புள்ளது. எனவே, இந்தப் பகுதிகளில் உள்ள மக்கள் வெள்ளம், நிலச்சரிவு
தொடர்பாக அவதானமாக இருப்பது அவசியம்.” என்றுள்ளது.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.