ஜனாதிபதியாக பொறுப்பேற்றுள்ள அநுரகுமார திசாநாயக்கவுக்கு (Anura Kumara Dissanayake), நாட்டை வழிநடத்தும் ஆளுமை உள்ளதாக, முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச (Mahinda Rajapaksa) தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி தேர்தலில் மாற்றத்தை விரும்பும் மக்களின் தீர்மானங்களை தாம் ஏற்றுக்கொள்வதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதேவேளை எமது தோல்விக்கான காரணங்களை கண்டறிந்து அதனை சரி செய்ய நடவடிக்கை எடுத்துள்ளளோம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
நாடாளுமன்றத் தேர்தல்
அதேவேளை நாடாளுமன்றத் தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் தமது கட்சியை மறுசீரமைக்கப் போவதாக சிறிலங்கா பொதுஜன பெரமுன தெரிவித்துள்ளது.
கட்சி அலுவலகத்தில் இன்று (24) ஒன்றுகூடிய முக்கியஸ்தர்கள் இது குறித்து கலந்துரையாடல் மேற்கொண்டுள்ளனர்.
மேலும் ராஜபக்ச குடும்பத்தை சேர்ந்த பலர் வெளிநாடுகளுக்கு தப்பிச் சென்றுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
நாமல் படுதோல்வி
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவும் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச (Namal Rajapaksa )மட்டும் இலங்கையில் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
நடைபெற்று முடிந்த ஜனாதிபதி தேர்தலில் நாமல் படுதோல்வி அடைந்திருந்தார். தமது சொந்த தொகுதிகளிலேயே மக்களால் அவர் தோற்கடிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.