முள்ளிவாய்க்கால் பேரவலம் இடப்பெற்ற பகுதிக்கு செல்வதை கர்தினால் மெல்கம் ரஞ்சித் இன்றுவரை தவிர்த்து வருகின்றார்.
சர்வதேசத்தின் பிரதிநிதிகள் பலர் இதுவரை முள்ளிவாய்க்காலுக்கு விஜயம் செய்துள்ள போதிலும் இலங்கையின் கர்தினால் மெல்கம் ரஞ்சித் முள்ளிவாய்க்காலுக்கு செல்லவில்லை.
யுத்த காலத்தில் கடும்போக்காக செயற்பட்ட அரசியல்வாதிகளுக்கு சாதகமான கருத்துக்களை கூறிவந்த மெல்கம் ரஞ்சித், பாதிக்கப்பட்ட மக்கள் தொடர்பாக குரல் எழுப்பவில்லை.
இவ்வாறிருக்க, உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு நீதி கேட்டு குரல் எழுப்பிய அவர், தற்போது அந்த விடயத்திலும் சிறிது அமைதி காப்பது போலவே உள்ளது.
இவை தொடர்பாக முழுமையாக ஆராய்கின்றது எமது ஊடறுப்பு நிகழ்ச்சி,