யாழ்ப்பாணம்(Jaffna) அரியாலை பகுதியில் 60 ஆயிரம் மில்லிலீட்டர் சட்டவிரோத மதுபானத்துடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் குறித்த கைது நடவடிக்கை இன்றையதினம்(18) மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மேலதிக விசாரணை
இதன்போது கசிப்பு தயாரிப்பதற்கு பயன்படுத்துகின்ற உபகரணங்களும் அவரிடமிருந்து
மீட்கப்பட்டுள்ளன.

சந்தேகநபர் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளின் பின்னர் அவரை நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான
நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருவதாக தெரிவித்திருந்தனர்.
Source: https://tamilwin.com/article/man-arrested-for-brewing-illegal-liquor-1734538631

