முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

மட்டக்களப்பில் வயல் பகுதியிலிருந்து ஆணின் சடலம் மீட்பு

மட்டக்களப்பு- எருவில் கிராமத்தில் வயல் பகுதியிலிருந்து ஆண் ஒருவர் சடலமாக மீட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த சடலமானது நேற்றையதினம் (26) மீட்கப்பட்டுள்ளது.

சம்பவத்தில் எருவில் கிராமத்தை சேர்ந்த 44 வயதுடைய
இரத்தினசிங்கம் உத்தமன் என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

உயிரிழப்பு

இது தொடர்பில் மேலும் தெரியவருகையில், குறித்த நபர் நேற்று அப்பகுதியில் அமைந்துள்ள அவரது வயலுக்குள் வேளாண்மையினை
பார்ப்பதற்காக துவிச்சக்கரவண்டியில் சென்றுள்ளார்.

மட்டக்களப்பில் வயல் பகுதியிலிருந்து ஆணின் சடலம் மீட்பு | Man S Body Rescued From Field In Batti

துவிச்சக்கர வண்டியை
குளக்கட்டில் வைத்துவிட்டு வயலுக்குள் இறங்கி தனது வேளாண்மைச் செய்கையை
பார்வையிட்டுள்ளார்.

அப்போது அவருக்கு ஏற்பட்ட உபாதை காரணமாக வயலுக்குள்ளேயே
மரணம் அடைந்திருக்கலாம் என உறவினர்கள் தெரிவித்தனர்.

விசாரணை

குறித்த விடயம் தொடர்பாக களுவாஞ்சிகுடி பொலிஸார் விசாரணைகள்
முன்னெடுத்துள்ளனர்.

மட்டக்களப்பில் வயல் பகுதியிலிருந்து ஆணின் சடலம் மீட்பு | Man S Body Rescued From Field In Batti

இந்நிலையில் திடீர் மரணவிசாரணை அதிகாரி
வி.ஆர்.மகேந்திரன், சடலத்தை பார்வையிட்டு வைத்தியசாலைக்கு எடுத்துச்
செல்லுமாறு உத்தரவிட்டுள்ளார்.

மாரடைப்பு காரணமாக குறித்த நபர் உயிரிழந்துள்ளதாக  உடற்கூற்று பரிசோதனையில் தெரிவிக்கப்பட்டதையடுத்து சடலம் உறவினர்களிடம்
ஒப்படைக்கப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்