முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

மன்னார் மேல் நீதிமன்ற நீதிபதிக்கு எதிராக கொழும்பில் ஒட்டப்பட்ட சுவரொட்டி : தொடரும் பணிப்புறக்கணிப்பு

மன்னார் (Mannar) நீதவான் நீதிமன்ற சட்டத்தரணிகள் இரண்டாவது நாளாகவும் பணிப்பகிஸ்கரிப்பை முன்னெடுத்துள்ளனர்.

மன்னார் மேல் நீதிமன்ற நீதிபதிக்கு எதிராகவும் அவருக்கு அவதூறு ஏற்படுத்தும் வகையில் கொழும்பில் (Colombo) ஒட்டப்பட்ட அனாமதேய சுவரொட்டிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்தும் குறித்த சம்பவத்துடன் தொடர்புடையவர்களை கைதுசெய்ய கோரியும் பணிப்பகிஸ்கரிப்பு மேற்கொள்ளப்பட்டது.

இன்றைய தினம் (30) மன்னார் மேல் நீதிமன்றத்திற்கு முன்பாக மன்னார் சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் இ.கயஸ்பெல்டானோ தலைமையில் சட்டத்தரணிகள் ஒன்று கூடி தமது எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.

மேல் நீதிமன்றம்

இதன் போது மன்னார் சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர்  ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில், ” கடந்த 12 வருடங்களுக்கு முன்னர் மன்னார் மேல் நீதிமன்றம் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் சம்பவம் தொடர்பாக சுமார் 52 பேர் வரை கைது செய்யப்பட்டு கடந்த 12 வருடங்களாக வழக்கு விசாரணை இடம்பெற்று நேற்றைய தினம் (29) குறித்த
வழக்கு விசாரணை இறுதி கட்டத்தை அடைந்துள்ளது.

மன்னார் மேல் நீதிமன்ற நீதிபதிக்கு எதிராக கொழும்பில் ஒட்டப்பட்ட சுவரொட்டி : தொடரும் பணிப்புறக்கணிப்பு | Mannar Magistrate S Court Advocates Dismissal

இந்த நிலையில் நேற்று முன்தினம் (28) குறித்த வழக்கு விசாரணை தொடர்பாக கொழும்பில் மன்னார் மேல் நீதிமன்ற நீதவானின் புகைப்படம்
பொறிக்கப்பட்ட சுவரொட்டிகள் அவருக்கு எதிராக ஒட்டப்பட்டுள்ளது.

பணிப் பகிஸ்கரிப்பு

வழக்கு விசாரணைகள் உரிய முறையில் இடம்பெற்று வந்துள்ள போதும் மன்னார் மேல் நீதிமன்ற நீதிபதிக்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கைக்கு எதிராக நேற்று (29) மற்றும் இன்று (30) பணிப்பகிஸ்கரிப்பை மேற்கொண்டுள்ளோம்.

மன்னார் மேல் நீதிமன்ற நீதிபதிக்கு எதிராக கொழும்பில் ஒட்டப்பட்ட சுவரொட்டி : தொடரும் பணிப்புறக்கணிப்பு | Mannar Magistrate S Court Advocates Dismissal

குறித்த சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் உடனடியாக கைது செய்யப்பட்டு சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து நாங்கள் பணிப் பகிஸ்கரிப்பை மேற்கொண்டோம்.

எனவே உரிய அதிகாரிகள் மன்னார் மேல் நீதிமன்ற நீதவானுக்கு அவதூறு ஏற்படுத்தும் வகையில் செயற்பட்டவர்களை கைது செய்து சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைக்கிறோம்“ என சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை பணிப்பகிஸ்கரிப்பு காரணமாக இன்றைய தினம் (30) அழைக்கப்பட்ட அனைத்து வழக்கு விசாரணைகள் பிறிதொரு தினத்திற்கு தவணை இடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

GalleryGalleryGallery

Source: https://ibctamil.com/article/mannar-magistrate-s-court-advocates-dismissal-1725009801

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.