ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க (Anura Kumara Dissanayake) மற்றும் மேல் மாகாண பொலிஸ் உயரதிகாரிகளுக்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.
குறித்த சந்திப்பானது இன்று (18) ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றுள்ளது.
சட்டத்தின் ஆட்சி
இதன்போது சட்டத்தின் ஆட்சியை நிலைநிறுத்தவும், சட்டம் ஒழுங்கைப் பாதுகாத்து, அமைதியை நிலைநாட்டவும், குற்றச் செயல்களை கட்டுப்படுத்தவும் அரசாங்கம் முக்கியமான நகர்வுகளை முன்னெடுத்துக் கொண்டிருப்பதாக ஜனாதிபதி சுட்டிக் காட்டியுள்ளார்.

இந்தச் சந்திப்பில் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால, பிரதியமைச்சர் சுனில் வட்டகல, பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ரவி செனவிரத்ன, பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய ஆகியோரும் கலந்து கொண்டிருந்தனர்.



