லெபனான் (Lebanon) மீது இஸ்ரேல் (Israel) தனது குண்டுவீச்சு பிரச்சாரத்தை தீவிரப்படுத்திய பின்னர் லெபனானில் 1.2 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் இடம்பெயர்ந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்தநிலையில், ஆயிரக்கணக்கானோர் நாடு முழுவதும் உள்ள தற்காலிக தங்குமிடங்களில், சிலர் பள்ளிகளில், மற்றவர்கள் பெரிய நிகழ்வு நடைபெறும் இடங்களில் அல்லது பெய்ரூட் கடற்கரைகளில் பாதுகாப்பைத் தேடுகின்றனர்.
அத்தோடு, சிலர் எங்கு இடம் கிடைக்குமோ அங்கெல்லாம் தஞ்சம் அடையும்படி கட்டாயப்படுத்துகிறார்கள்.
இஸ்ரேலிய தாக்குதல்கள்
இஸ்ரேலிய தாக்குதல்கள் அதிகரித்து வருவதால், இடம்பெயர்ந்தவர்களில் பலர் தங்களுடைய தற்காலிக தங்குமிடங்களில் நிரந்தரமாக தங்கும் சூழ்நிலை உருவாக்கப்படுகின்றது.
இதனால் நிலைமை நிலைமை மிகவும் மோசமடைவதுடன் தெற்கு புறநகர் பகுதிகளுக்குள் உள்ள பல வசதிகள் முற்றிலும் முடக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.