2025 ஆம் ஆண்டுக்கான பாடசாலைகளின் முதலாம் தவணை ஆரம்பமாவதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
அதன்படி இன்று முதல் முதலாம் தவணை கற்றல் கற்பித்தல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளது.
கல்வி அமைச்சு
மேலும் முதலாவது தவணை மூன்று கட்டங்களாக நடைபெறுவதோடு, முதல் கட்டம் இன்று முதல் மார்ச் 14 வரை நடைபெறும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
முதலாம் தவணையின் இரண்டாம் கட்டம் ஏப்ரல் 1 முதல் 11 வரையிலும், மூன்றாம் கட்டம் ஏப்ரல் 21 முதல் மே 9 வரையிலும் நடைபெறும் என்று கல்வி அமைச்சு மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.