நாணயக் கொள்கை நிலைப்பாட்டைப் மாற்றாமல் தொடர்ந்து பராமரிக்க முடிவு செய்ததாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.
நாணயக் கொள்கை சபை கூட்டத்தில் நேற்று (22) இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
அதன்படி, ஒரிரவு கொள்கை வீதம் (OPR) 7.75 சதவீதமாக மாறாமல் இருக்கும்.
உலகளாவிய போக்குகள்
உள்நாட்டு மற்றும் உலகளாவிய போக்குகளை கருத்தில் கொண்டு மத்திய வங்கி இந்த முடிவை எட்டியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

தற்போதைய நாணயக் கொள்கை நிலைப்பாடு பணவீக்கத்தை எதிர்வரும் காலத்தில் 5 சதவீதம் கொண்ட இலக்கை நோக்கி வழிநடாத்துவதில் உதவும் அதேவேளை வளர்ச்சிக்கு ஆதரவளிக்குமென சபை கருதுகின்றது.

