Courtesy: Sivaa Mayuri
சபாநாயகர் அசோக ரன்வல தனது கலாநிதி பட்டம் தொடர்பில் கூறியுள்ள பொய்யான கூற்று நாடாளுமன்றத்தை சீரழித்துள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தி விமர்சித்துள்ளது.
இந்தநிலையில், அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் தமது கல்வி தகைமைகளை வெளிப்படுத்தவேண்டும் என்று கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்சன ராஜகருணா, ஊடகங்கள் ஊடாக கோரிக்கை விடுத்துள்ளார்.
நாடாளுமன்றம், மேலும் சீரழிவதைத் தடுப்பதற்காக, தாம் தமது தகுதிகளை பகிரங்கப்படு;த்துவதாக குறிப்பிட்டுள்ள அவர், ஏனைய உறுப்பினர்களும், இதனை செய்வார்கள் என்று தாம் எதிர்பார்ப்பதாக குறிப்பிட்டுள்ளார்.
கல்விச் சான்றிதழ்கள்
இதன்போது தனது கல்விச் சான்றிதழ்களின் பிரதிகளையும் அவர் ஊடகங்களுக்குக் காண்பித்துள்ளார்.
எனவே, சபாநாயகரும் தனது தகுதிகள் குறித்து தெளிவுப்படுத்த இதனையே செய்யவேண்டும் என்று அவர் கோரியுள்ளார்.
இந்தநிலையில் சபாநாயகர் தனது கலாநிதி பட்டச் சான்றிதழை பொதுமக்களுக்கு காண்பிக்கவேண்டும்
இதன்போதே இந்த விவகாரம் முடிவுக்கு வரும் என்றும் ஹர்சன ராஜகருணா தெரிவித்துள்ளார் .