சமந்தா – நாகசைதன்யா
தெலுங்கு நடிகர் நாகசைதன்யா நடிகை சமந்தா இருவரும் காதலித்து திருமணம் செய்துகொண்டனர். 2017ம் ஆண்டு இவர்களுடைய திருமணம் பிரம்மாண்டமாக நடந்தது.
நான்கு ஆண்டுகள் இருவரும் வாழ்ந்து வந்த நிலையில், 2021ம் ஆண்டு விவாகரத்து பெற்று பிரிந்தனர். இவர்களுடைய பிரிவு ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை கொடுத்தது.
தமிழ்நாட்டில் 2 நாட்களில் விடாமுயற்சி படம் செய்துள்ள வசூல்.. இத்தனை கோடியா
ஆதங்கத்துடன் பேசிய நாகசைதன்யா
சமந்தவுடனான விவாகரத்துக்கு பின், நடிகை சோபிதாவை காதலித்து இரண்டாம் திருமணம் செய்துகொண்டார் நடிகர் நாகசைதன்யா. இந்த நிலையில், சமீபத்திய பேட்டி ஒன்றில் சமந்தாவுடனான விவாகரத்து குறித்து ஆதங்கத்துடன் பேசியுள்ளார்.
அவர் கூறியதாவது: “நானும் சமந்தாவும் தனிப்பட்ட காரணங்களுக்காக விவாகரத்து செய்யும் முடிவை எடுத்தோம். இருவருமே ஒருவருக்கொருவரை மதிக்கிறோம். ஆனால் ஏன் என்னை குற்றவாளியை போல் பார்க்கிறீர்கள். ஒரு உறவை முறித்துக் கொள்வதற்கு முன் நான் 1000 முறை யோசிப்பேன். ஏனெனில் அதன் பின்விளைவுகளை பற்றி எனக்கு நன்றாக தெரியும். இது இருவரும் இணைந்து எடுத்த பரஸ்பர முடிவு” என கூறியுள்ளார்.