யாழ்ப்பாணத்தின் வரலாற்றுச் சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின்
மகோற்சவப் பெருவிழாவின் 19ஆம் திருவிழா இன்று (04) வெகு விமரிசையாக
இடம்பெற்றது.
இன்றைய திருவிழாவில் முருகப்பெருமான் தங்கமயில் சக தங்க அண்ண வாகனத்தில்
எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
திருவிழா
ஆலயச் சூழல் முழுவதும் பக்தர்களால் நிரம்பியிருந்த நிலையில், பக்தர்கள்
“அரோகரா” கோஷம் முழங்க முருகப்பெருமானை வழிபட்டனர்.

வாகனத்தில் எழுந்தருளிய
கந்தனை தரிசிக்க நாட்டின் பல பகுதிகளில் இருந்தும் பெருந்திரளான பக்தர்கள்
நல்லூரை நோக்கி வருகை தந்திருந்தனர்.
மங்கள வாத்தியங்கள் முழங்க, மேளதாளங்கள் அதிர, அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில்
எழுந்தருளிய நல்லூர் கந்தனின் திருக்காட்சி பக்தர்களை பரவசத்தில் ஆழ்த்தியது.












Source: https://tamilwin.com/article/nalloor-kovil-fesrtival-2026-1788539815

