வரலாற்றுச் சிறப்புமிக்க யாழ்ப்பாணம் நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த மகோற்சவப் பெருவிழாவின் 21ஆம் நாள் திருவிழாவான வேல் விமான உற்சவம் இன்று(6) ஞாயிற்றுக்கிழமை பக்தி பரவசத்துடன் இடம்பெற்றது.
இதன்போது, ஆலயத்தில் இடம்பெற்ற சிறப்பு பூஜை வழிபாடுகளில் பெருந்திரளான பக்தர்கள் கலந்துகொண்டு நல்லூர் கந்தனை தரிசித்தனர்.
கலாசார அலுவல்கள் அமைச்சர்
இதேவேளை, யாழ்ப்பாணத்திற்கு இன்று விஜயம் செய்த கலாசார அலுவல்கள் அமைச்சர் பேராசிரியர் ஹினிதும சுனில் செனவி, நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி ஆலயத்தில் வழிபாடுகளில் ஈடுபட்டார்.

அவருடன் நாடாளுமன்ற உறுப்பினர் க. இளங்குமரனும் கலந்துகொண்டிருந்தார்.














Source: https://tamilwin.com/article/nallur-kandaswamy-temple-21st-day-festiva-1788713852

