சிறிலங்கா பொதுஜன பெரமுனவின்(slpp) தோல்வியுற்ற ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ச(namal rajapaksa) கட்சியை விட்டு வெளியேறியவர்களுக்கு ஒரு இலக்கில் பயணிப்பதற்கு மீண்டும் கட்சிக்கு வருமாறு அழைப்பு விடுத்துள்ளார்.
ஜனாதிபதித் தேர்தலில் சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் செயற்பாடுகளை மீளாய்வு செய்து வரவிருக்கும் எந்தவொரு தேர்தலிலும் போட்டியிடத் தயாராகுவோம் என்றும் அவர் கூறினார்.
கடைசி நிமிட முடிவால் தான் ஜனாதிபதி தேர்தலில் போட்டி
கட்சி எடுத்த கடைசி நிமிட முடிவால் தான் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டதாக அவர் குறிப்பிட்டார்.
சிறிலங்கா பொதுஜன பெரமுனவை பிளவுபடுத்துவதற்கு வெளிப்புற சக்தி ஒன்று முயற்சிப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
கட்சியை விட்டு வெளியேறியவர்கள்
கட்சியை விட்டு வெளியேறியவர்கள் மீண்டும் தம்முடன் இணைந்து நாட்டைப் பாதுகாப்பதில் கவனம் செலுத்த வேண்டுமென அவர் கேட்டுக் கொண்டார்.
நடைபெற்று முடிந்த பொதுத் தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை ஆதரித்து சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் பெருமளவு நாடாளுமன்ற உறுப்பினர்கள் பிரசாரத்தில் ஈடுபட்டமை குறிப்பிடத்தக்கது.