முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

தந்தையின் சொல்லையே கேட்காத நாமல் ராஜபக்ச : அம்பலப்படுத்தும் முன்னாள் சகா

நடைபெற்று முடிந்த ஜனாதிபதி தேர்தலில் தனியாகக் கேட்க வேண்டாம் என்று நாமும் கூறினோம். முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவும்(mahinda rajapaksa) கூறினார். ஆனால் நாமல்(namal rajapaksa) அதை கேட்கவில்லை என தாயக மக்கள் கட்சியின் தேசிய அமைப்பாளர் திலும் அமுனுகம(dilum amunugama) தெரிவித்துள்ளார்.

கேகாலை அம்பன்பிட்டிய பிரதேசத்தில் உள்ள ஹோட்டலில் நடைபெற்ற கட்சியின் கேகாலை வேட்பாளர்கள் மற்றும் செயற்பாட்டாளர்களுடனான சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்திருந்தார்.

தொடர்ந்தும் அவர் கருத்து தெரிவிக்கையில்;

வாக்குகளை குறைத்தவர் நாமல் ராஜபக்சவே

சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் வாக்குகளை அறுபத்தொன்பது இலட்சத்தில் இருந்து மூன்று இலட்சமாக குறைத்தவர் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் தோழர் நாமல் ராஜபக்சவே ஆவார்.

தந்தையின் சொல்லையே கேட்காத நாமல் ராஜபக்ச : அம்பலப்படுத்தும் முன்னாள் சகா | Namal Rajapaksa Did Not Listen To Mahinda

வலுவான எதிர்க்கட்சியை உருவாக்க வேண்டும் என்பதே எங்கள் நம்பிக்கை. வலுவான எதிர்க்கட்சி என்றால் பாரம்பரிய அரசியலுக்கு செல்ல மாட்டோம். கோட்டாபய ராஜபக்சவின்(gotabaya rajapaksa) அரசாங்கம் வீழ்ச்சியடையக் காரணம் பலமான எதிர்க்கட்சி இல்லாததே.

சஜித்தின் அரசியல்

பலமான எதிர்க்கட்சி என்பது அதிக எம்பிக்களைக் கொண்ட எதிர்க்கட்சி அல்ல. இது தரத்தில் வலுவாக இருக்க வேண்டும்.

சஜித் பிரேமதாச(sajith premadasa) அண்மையில் செய்ததை நீங்கள் பார்த்திருப்பீர்கள். அவருடைய பலத்தை நான் கண்டேன். காலையில் எழுந்தவுடனேயே கொஞ்ச நேரம் அழுது புலம்பினாலும் தீர்வு இல்லை. அரசு செய்யும் நல்ல வேலையும் நல்லதல்ல, கெட்டதும் நல்லதல்ல என்கிறார்கள். சஜித் அப்படிப்பட்ட ஒரு எதிர்க்கட்சித்தலைவர்.

தந்தையின் சொல்லையே கேட்காத நாமல் ராஜபக்ச : அம்பலப்படுத்தும் முன்னாள் சகா | Namal Rajapaksa Did Not Listen To Mahinda

தற்போதைய அரசாங்கம் தேசிய மக்கள் சக்தியாக இருந்தாலும் பரவாயில்லை, ஏதாவது நல்லது செய்தால், அதை தெளிவாக ஆதரிக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.

திலும் அமுனுகம முன்னர் சிறிலங்கா பொதுஜன பெரமுனவில் இருந்து தற்போது திலித்த ஜயவீர தலைமையிலான தாயக மக்கள் கட்சியுடன் இணைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.