டெஸ்ட்
சினிமாவில் படங்கள் திரையரங்கில் வெளியாகி நல்ல வரவேற்பை பெறுவதை விட நேரடியாக OTT தளத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை ரசிகர்கள் மத்தியில் பெற்று வருகிறது.
அந்த வகையில், சூர்யா நடிப்பில் வெளியான ஜெய் பீம் திரைப்படம் OTT தளத்தில் வெளியாகி மாபெரும் ஹிட் அடித்தது.

இந்நிலையில், மாதவன், நயன்தாரா நடித்துள்ள ‘டெஸ்ட்’ திரைப்படம் நேரடியாக OTT தளத்தில் வெளியாக உள்ளது.
YNOT Studio தயாரிப்பு நிறுவனத்தின் உரிமையாளர் சசிகாந்த் இயக்கத்தில் உருவான இப்படத்தில் நயன்தாரா, சித்தார்த், மாதவன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

எப்போது தெரியுமா?
கிரிக்கெட்டை மையப்படுத்தி உருவாகி இருக்கும் டெஸ்ட் திரைப்படம் நெட்ஃப்ளிக்ஸ் OTT தளத்தில் வரும் ஏப்ரல் 4 – ம் தேதி வெளியாக உள்ளது. இதனால் ரசிகர்களுக்கு இப்படத்தின் மீது எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
Source: https://cineulagam.com/article/nayanthara-movie-ott-platform-1741245688

