முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

நெடுந்தீவில் கொலை செய்யப்பட்ட இளைஞன்! நீதி கோரி போராட்டத்தில் குதித்த மக்கள்

நெடுந்தீவு பகுதியில் கொலை செய்யப்பட்ட இளைஞனுக்கு நீதி கோரி மக்கள் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

குறித்த போராட்டமானது நெடுந்தீவு காவல் நிலையத்துக்கு முன்பாக இன்று (21) இடம்பெற்றுள்ளது.

நெடுந்தீவு ஏழாம் வட்டாரத்தை சேர்ந்த இளைஞர் ஒருவர் நேற்று (20) அதிகாலை அடித்து கொலை செய்யப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டார்.

கவனயீர்ப்பு போராட்டம்

இந்த நிலையில், பிரேத பரிசோதனையின் பின் நேற்று இரவு சடலம் உறவினர்களிடம் கையளிக்கப்பட்ட
நிலையில் இன்று இறுதி கிரிகைகள் அவரது இல்லத்தில் நடைபெற்று அதன் பின்னர்
நல்லடக்கத்திற்காக சேமக்காலைக்கு எடுத்துச் செல்லப்பட்டது.

நெடுந்தீவில் கொலை செய்யப்பட்ட இளைஞன்! நீதி கோரி போராட்டத்தில் குதித்த மக்கள் | Nedundivu Youth Murder People Protest

இதன்போது, மக்கள் சடலத்தை தோள்களில் சுமந்தவாறு நெடுந்தீவு காவல்நிலையம் முன்பாக கொண்டு சென்று கவனயீர்ப்பு
போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நேற்றைய தினம் நடைபெற்ற இளைஞர் கொலையுடன் சம்பந்தப்பட்ட சந்தேக நபர் ஒருவர்
ஏற்கனவே கைது செய்யப்பட்டு யாழ்ப்பாணம் போதனா வைத்திய சாலையில்
சிகிச்சை பெற்று வருகின்றார்.

காவல்துறையினரிடம் வாய்த்தர்க்கம்

இந்த நிலையில், குறித்த கொலையுடன் சம்பந்தப்பட்ட ஏனைய
மூவரையும் விரைவாக கைது செய்யுமாறு கோரி மக்கள் சடலத்துடன்
சென்று நெடுந்தீவு காவல் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நெடுந்தீவில் கொலை செய்யப்பட்ட இளைஞன்! நீதி கோரி போராட்டத்தில் குதித்த மக்கள் | Nedundivu Youth Murder People Protest

இதன்போது, காவல்துறையினரின் அசமந்த போக்கை சுட்டிக்காட்டிய மக்கள் காவல்துறையினரிடம் வாய்த்தர்க்கத்திலும் ஈடுபட்டுள்ளனர்.

இதனையடுத்து, கொலை செய்யப்பட்ட இளைஞனின் சடலம் சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

GalleryGalleryGalleryGallery

Source: https://ibctamil.com/article/nedundivu-youth-murder-people-protest-1718979721?itm_source=parsely-popular

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்