ஜனாதிபதி பதவியின் பொறுப்புகளைக் கையேற்ற பின்னர் புதிய ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க (Anura Kumara Dissanayake) மத தலைவர்களை சந்தித்துள்ளார்.
குறித்த சந்திப்புகளானது நேற்றையதினம் (23) இடம்பெற்றுள்ளது.
இதற்கமைய, நேற்று (23) பிற்பகல் கொழும்பு தவட்டகஹ பள்ளிவாசலுக்குச் சென்று மௌலவிமார்களை சந்தித்துள்ளார்.
மத தலைவர்கள்
இதேவேளை, நேற்றையதினம் கண்டி தலதா மாளிகைக்கு விஜயம் செய்து, அங்கு வழிபாட்டில் ஈடுபட்டுள்ளார்.
அதனை தொடர்ந்து, கண்டி மல்வத்து மகாவிகாரையின் சியம் மகாநிக்காயவின் மல்வத்து பீடத்தின் மகாநாயக்கதேரர் சங்கைக்குரிய திப்பட்டுவாவே ஸ்ரீ சித்தார்த்த சுமங்கல நாயக்கதேரரை அநுரகுமார திசாநாயக்க (Anura Kumara Dissanayake) சந்தித்துள்ளார்.
மேலும், அஸ்கிரிய மகாவிகாரையின் சியம் மகாநிக்காயவின் அஸ்கிரிய பீடத்தின் மகாநாயக்க தேரர் வரக்காகொட ஸ்ரீ ஞானரத்தன தேரரையும் சந்தித்து ஆசி பெற்றுள்ளார்.
இதேவேளை, நாடாளுமன்றம் இன்றிரவு கலைக்கப்படும் என்றும், டிசம்பரில் பொதுத் தேர்தல் நடத்தப்படும் என்று தகவல் வெளியாகி உள்ளமை குறிப்பிடத்தக்கது.
After assuming duties, I met Maulavis at Dawatagaha mosque in Colombo yesterday (23). pic.twitter.com/1RnAiJ1Otr
— Anura Kumara Dissanayake (@anuradisanayake) September 24, 2024