அநுர குமார திஸாநாயக்க தலைமையிலான
புதிய அரசாங்கம் இறந்தவர்களை நினைவு கூறுகின்ற செயற்பாடுகளுக்கு தடை
விதிக்காது உரிமைகளை மதித்து அரசியல் அமைப்பின் ஊடாக வழங்கப்பட்டுள்ள உரிமையை மதிப்பார்கள் என சம்பூர் -ஆலங்குளம் மாவீரர் துயிலுமில்ல நினைவேந்தல்
ஏற்பாட்டு குழுவின் தலைவர் கந்தையா பண்பரசன் தெரிவித்துள்ளார்.
சம்பூர் -ஆலங்குளம் மாவீரர் துயிலுமில்லத்தில் இன்று வெள்ளிக்கிழமை (22) மாலை
ஊடகவியலாளர் சந்திப்பு இடம் பெற்றது.
இதில் கலந்து கொண்ட சம்பூர் -ஆலங்குளம் மாவீரர் துயிலுமில்ல நினைவேந்தல்
ஏற்பாட்டு குழுவின் தலைவர் கந்தையா பண்பரசன் ஊடகங்களுக்கு கருத்து
தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
மாவீரர் தினம்
தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், “ கடந்தமுறை நினைவேந்தல் தினம் செய்வதற்கு மூதூர் நீதிமன்றம் தடையுத்தரவு
பிறப்பிக்கப்பட்டிருந்தது. தற்போதைய சூழ்நிலையை கருத்தில் கொண்டு அரச
சட்டமுறைகளை பின்பற்றி செய்யுமாறு காவல்துறையினர் தெரிவித்தனர்.
இம்முறை மாவீரர்
தினத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிலையில் சில கட்சியினர்
உள்நாட்டிலும்,வெளிநாட்டிலும் நிதி சேகரிப்பதிலும் ஈடுபட்டுள்ளனனர்.இதனை நம்ப
வேண்டாம்.எதுவென்றாலும் எமது குழுவோடு தொடர்பு கொள்ளுங்கள்.
இது ஜனநாயக நாடாகும்.இறந்தவர்களை நினைவுபடுத்துவதற்கான உரிமை அரசியல்
அமைப்பினூடாக வழங்கப்பட்டுள்ளது.
தமிழர் தேசம்
வட கிழக்கில் உள்ள மக்கள் பெரும்பான்மை
மக்களை நம்பி இம்முறை வாக்களித்துள்ளமையானது தமிழர் தேசம் ஜனநாயகத்தை நோக்கி
பயணிக்கிறது என்பதை சுட்டிக்காட்டுகிறது.
அநுர குமார திஸாநாயக்க தலைமையிலான
புதிய அரசாங்கம் இறந்தவர்களை நினைவு கூறுகின்ற செயற்பாடுகளுக்கு தடை
விதிக்காது உரிமைகளை மதித்து அரசியல் அமைப்பின் ஊடாக வழங்கப்பட்டுள்ள உரிமையை
மதிப்பார்கள் ” என தெரிவித்தார்.