சிறகடிக்க ஆசை
சிறகடிக்க ஆசை, வரவர சீரியலில் கொஞ்சம் சுவாரஸ்யம் குறைந்தபடி உள்ளது என ரசிகர்கள் கருத்து கூறி வருகிறார்கள்.
கதையில் மீனாவிற்கு ரோஹினி குறித்து எல்லா விஷயமும் தெரிய வந்தும் மற்றவர்களுக்கு இன்னும் தெரியவரவில்லை. மாறாக ரோஹினிக்கு கிரிமினல் தனம் செய்வதற்கு மீனா பிளான் போட்டுக்கொடுத்து வருகிறார்.

ரோஹினி, க்ரிஷுடன் மனோஜை பழக விட வேண்டும் என எல்லா விஷயங்களையும் செய்கிறார், ஆனால் விஜயாவிற்கு இது சுத்தமாக பிடிக்கவே இல்லை.

தனது சொந்த ஊரில் புதிய வீடு கட்டியுள்ள எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் நடிகர் விபுணன்.. இதோ போட்டோஸ்
புரொமோ
நாளைய எபிசோடின் புரொமோவில், க்ரிஷ் தனது Report Cardல் மனோஜை கையெழுத்து போட கேட்கிறார்.

விஜயா அவன் எதற்கு கையெழுத்து போட வேண்டும் என கோபமாக திட்டுகிறார், மனோஜும் முதலில் மறுத்தார். பின் ரோஹினி வழக்கம் போல் பேய் நாடகம் போட மனோஜ் அறை விட்டு வெளியே வந்ததும் திடீரென கையெழுத்து போடுகிறார்.
தான் வேண்டாம் என கூறியும் மனோஜ் கையெழுத்து போட்டது விஜயாவிற்கு சுத்தமாக பிடிக்கவில்லை, செம கோபத்தில் உள்ளார்.


