இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையகம், ஒரு
தேசமாக ஒன்றிணைந்தது – தேசிய இயக்கம் என்ற தலைப்பில் 24 மணிநேர அவசர
இலக்கத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
போதைப்பொருள் அச்சுறுத்தலை ஒழிப்பதற்கான அரசாங்கத்தின் புதிய முயற்சியை முன்னெடுக்கும் வகையில் இந்த இலக்கம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
அவசர இலக்கம்
ஜனாதிபதி அலுவலக அறிக்கையின்படி “ஒரு தேசமாக ஒன்றிணைந்தது” என்ற தேசிய
செயல்பாட்டுக் குழுவின் வேண்டுகோளின் அடிப்படையில், ஆணையகம் 1818 என்ற அவசர
இலக்கத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

போதைப்பொருள் கடத்தல், விநியோகம் அல்லது சந்தேகத்திற்கிடமான போதைப்பொருள்
தொடர்பான ஏதேனும் நடவடிக்கைகள் தொடர்பான துல்லியமான தகவல்களை பொதுமக்கள்
தெரிவிக்க இந்த இலக்கத்தை பயன்படுத்த முடியும் என அறிவிக்கப்பபட்டுள்ளது.

