யாழ்ப்பாணத்தில் 170 மில்லியன் ரூபா செலவில் புதிய உள்ளக விளையாட்டு அரங்கமொன்றை அமைப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
வடக்கு மாகாணத்தில் விளையாட்டு மற்றும் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் நோக்கில் இந்தத் திட்டம் செயற்படுத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
டேபள் டென்னிஸ், டென்னிஸ், பூப்பந்தாட்டம், வலைப்பந்தாட்டம் மற்றும் சதுரங்கம் ஆகிய போட்டிகள் குறித்த உள்ளக அரங்கில் நடத்தப்படும்.
சமூக ஒருங்கிணைப்பு
மேலும், இந்தத் திட்டம், இளைஞர்களை விளையாட்டில் பங்கேற்க ஊக்குவிப்பதில் முக்கிய பங்கு வகிக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், பிராந்திய விளையாட்டு நடவடிக்கைகள் மூலம் சமூக ஒருங்கிணைப்பை வளர்ப்பதும் இந்தத் திட்டத்தின் நோக்கமாகும்.

