முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

அநுர ஆட்சியிலும் தொடர்ந்த மாவீரர் நினைவேந்தல் அச்சுறுத்தல்கள் : மணிவண்ணன் பகிரங்கம்

இலங்கையில் இடம்பெற்ற ஆட்சி மாற்றம் என்பது மாவீரர் தினத்தைப் பொறுத்த வரையில் எந்தவொரு மாற்றத்தையும் கொண்டுவரவில்லை என யாழ் மாநகர சபையின் முன்னாள் முதல்வரும் சட்டத்தரணியுமான விஸ்வலிங்கம் மணிவண்ணன் (V. Manivannan) தெரிவித்துள்ளார்.

2015 இலிருந்து நினைவேந்தல்கள் முன்னெடுக்கப்பட்ட போது இடம்பெற்ற அதே கைதுகள், காவல்துறை விசாரணைகள், அச்சுறுத்தல்கள் இம்முறையும் தொடர்ந்ததாக அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.

ஐபிசி தமிழின் சக்கரவியூகம் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், “தமிழ் மக்களுக்கு இந்த அரசின் மேல் மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருக்கின்றது. ஆனால் அதை நிவர்த்தி செய்யும் வகையில் அவர்களுடைய நகர்வுகள் இருக்கவில்லை.

தமிழ் மக்கள் அல்லது தேசிய இனப்பிரச்சினை தொடர்பில் காத்திரமான தீர்வை தங்களது அரசியலமைப்பு மாற்றத்தின் ஊடாக முன்னொண்டு வருவார்களா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

ஜேவிபி ஆட்சிக்கு வந்த பிறகு நாங்கள் மாவீரர் தினத்தை அனுஷ்டிக்கவில்லை.

2015 ஆம் ஆண்டிலிருந்து மாவீரர்களுக்கான அஞ்சலிகள் உறவினர்களால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

அப்போது மிகப்பெரிய அளவிலே துயிலுமில்லங்களில் கூட மாவீரர் நாள் நினைவேந்தலை செய்யக்கூடிய நிலைமை ஏற்பட்டு விட்டது.

2015 இலிருந்து தொடர்ச்சியாக நினைவேந்தல்கள் முன்னெடுக்கப்பட்ட போது இடம்பெறும் அதே கைதுகள், காவல்துறை விசாரணைகள், அச்சுறுத்தல்கள் தொடர்ந்து கொண்டே தான் இருக்கின்றது.

ஆகவே ஆட்சி மாற்றம் என்பது மாவீரர் தினத்தைப் பொறுத்த வரையில் எந்தவொரு மாற்றத்தையும் கொண்டுவரவில்லை. முன்னர் இருந்த நிலைமை தொடர்கின்றது”என தெரிவித்தார்.  

https://www.youtube.com/embed/QLBFCpMhK-4

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.