சபாநாயகர் அசோக சபுமல் ரன்வலவின் கல்வித் தகுதியின் நம்பகத்தன்மையை தெளிவுபடுத்தத் தவறினால், அவருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையை கொண்டு வருவது குறித்து ஆலோசித்து வருவதாக சமகி ஜன்பலவேகவின் நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் பி பெரேரா தெரிவித்துள்ளார்.
கலாநிதி பட்டத்தை அதிகாரத்தை பெற்று, சபாநாயகர் பதவியை பெற்றுக்கொள்ளவே அவர் பயன்படுத்தியுள்ளதாகவும், இதற்கு இதுவரை உரிய பதிலை அசோக சபுமல் ரன்வல வழங்காதது சிக்கலாக உள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
குறிப்பாக நேற்றைய தினம் அரசாங்கத்திற்கு ஆதரவாகப் பேசிய ஊடகப் பேச்சாளர்கள் அக்கேள்விகளுக்கு பதிலளிக்காமல் தவிர்த்ததாலும், கலாநிதி பட்டம் தொடர்பான விடயம் நாடாளுமன்ற இணையத்தளத்திலிருந்து நீக்கப்பட்டதாலும் பாரிய சிக்கல் ஏற்பட்டுள்ளதாக அஜித் பீ பெரேரா தெரிவித்துள்ளார்.
சபுமல் ரன்வல
மேலும், அடுத்த இரண்டு நாட்களுக்குள் சபாநாயகர் அசோக சபுமல் ரன்வலகே தனது கலாநிதி பட்டத்தை நாட்டுக்கு காட்ட வேண்டும் என்றும், தவறினால் ஜக்கிய மக்கள் சக்தியால் ஒழுக்காற்று தீர்மானம் எடுக்க நேரிடும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இல்லாவிட்டால் எதிர்க்கட்சிகள் ஒரு படி முன்னேறி மற்ற கட்சிகளுடன் கலந்துரையாடி தனக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையை சமர்பிப்போம் என அஜித் பி பெரேரா மேலும் தெரிவித்துள்ளார்.
இந்த விவகாரம் நாடாளுமன்ற சிறப்புரிமைய பாதிக்கும் செயற்பாடு என்றும் கூறியுள்ளார்.