அனுராதபுரத்தில் நேற்று(21) நடைபெற்ற சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் கன்னி தேர்தல் பேரணியை ஒழுங்கமைப்பதில் அனுராதபுரம்(anuradhapura) மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் சிறிலங்கா பொதுஜன பெரமுன (SLPP) நாடாளுமன்ற உறுப்பினர்கள் எவரும் பங்கேற்கவில்லை என சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம்(sagara kariyawasam) இன்று (22) தெரிவித்தார்.
இவ்வாறு அந்த எம்.பிக்கள் கலந்து கொள்ளாதது குறித்து மக்கள் பிரச்சினையாக எடுக்கவில்லை என்றும், அவர் குறிப்பிட்டார்.
அதிக அளவில் மக்கள் கலந்து கொண்டனர்
இந்த பேரணியில் அதிக அளவில் மக்கள் கலந்து கொண்டதாகவும் அவர் செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார்.
மகிந்த ராஜபக்சவிடம் கோரிக்கை
தேசிய தேவைகளுக்கு துரோகம் இழைத்தவர்களை மீளப் பெற்றுக் கொள்ள வேண்டாம் என அநுராதபுர மக்கள் கட்சியின் தலைவர் மகிந்த ராஜபக்சவிடம் கோரிக்கை விடுத்துள்ளதாகவும் அவர் மேலும் கூறினார்.
மொட்டுவின் பெருமளவான எம்பிக்கள் ரணில் பக்கமும் மேலும் சிலர் சஜித் பிரேமதாச பக்கமும் இணைந்து தமது ஆதரவை வெளிப்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.