முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

பொது வேட்பாளர் விடயத்தில் தென்னிலங்கை தமிழர்களை சேர்க்காதீர்கள் : மனோ கணேசன்

தமிழர் பொது வேட்பாளர் விடயத்தில் தென்னிலங்கை தமிழர்களை சேர்க்காதீர்கள். அது வேறு தளம். இது வேறு தளம் என தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன்(Mano Ganesan) தெரிவித்துள்ளார்.

குறித்த விடயத்தினை அவர் இன்று(01.05.2024) கிளிநொச்சியில் இடம்பெற்ற தமிழ் தேசிய மே நாள் விழாவில் உரையரற்றும் போது கூறியுள்ளார்.

இந்த வாகனத்தை கண்டால் உடனடியாக அறிவிக்கவும்: பொதுமக்களிடம் உதவிகோரும் பொலிஸார்

இந்த வாகனத்தை கண்டால் உடனடியாக அறிவிக்கவும்: பொதுமக்களிடம் உதவிகோரும் பொலிஸார்

பொது வாக்கெடுப்பு

இதன் போது அவர் மேலும் தெரிவிக்கையில், சஜித் பிரேமதாச, என் முன்னிலையில் வடகிழக்கு  சிவில் சமூக பிரதிநிதிகளிடம் 13ஐ முழுமையாக அமுல் செய்வேன் என கூறி அதை தன் தேர்தல் விஞ்ஞாபனத்தில் இடம்பெற செய்வதாக உறுதி அளித்தார்.

ஏனைய பிரதான சிங்கள வேட்பாளர்கள் ரணில், அனுர ஆகியோரிடம் தமிழர்களுக்கான தீர்வை தங்கள் தேர்தல் விஞ்ஞாபனங்களில் பிரசுரிக்க சொல்லுங்கள்.

பொது வேட்பாளர் விடயத்தில் தென்னிலங்கை தமிழர்களை சேர்க்காதீர்கள் : மனோ கணேசன் | Not Include South Tamils General Candidate Issue

ஜனாதிபதி தேர்தலை பொது வாக்கெடுப்பாக  கருதி வடக்கு கிழக்கில் பொது வேட்பாளரை நிறுத்த தமிழ் கட்சிகளுக்கு உரிமை உண்டு. ஆனால் கடைசி நேரத்தில், ஒரு  பெரும்பான்மை வேட்பாளருக்கு 2ஆம் விருப்பு வாக்கு கொடுக்கலாம் என விக்கினேஸ்வரன் எம்.பி சொல்வது, சந்தேகங்களை ஏற்படுத்தி, பொது வேட்பாளர் கோசத்தை மலினப்படுத்துகிறது. 

ஆனால் நான் வரலாறு முழுக்க மலையகத்தில் உரிமைக்கு குரல் கொடுத்து, வடகிழக்கில் உறவுக்கு கரம் கொடுத்துள்ளேன். அதனால் கரம் கொடுக்க இன்று கிளிநொச்சி வந்தேன்.

தலவாக்கலையில் தொழிலாளர் தேசிய சங்கத்தின் மே தின கூட்டம்: சஜித் பங்கேற்பு

தலவாக்கலையில் தொழிலாளர் தேசிய சங்கத்தின் மே தின கூட்டம்: சஜித் பங்கேற்பு

தமிழர் ஜனத்தொகை

இன்று வடகிழக்கில் பெரும் சவால் இளைய தமிழ் தலைமுறை நாட்டை விட்டு வெளியேறுவதாகும். இதனால் தமிழர் ஜனத்தொகை குறைகிறது. கடந்த காலங்களில் மலையக தமிழர்கள் கிளிநொச்சி, முல்லை, வவுனியா, மாவட்டங்களில் வந்து குடியேறினார்கள்.

அன்று அவர்கள் இங்கே வராமல் இருந்திருந்தால் இன்று தமிழர் ஜனத்தொகை கணிசமாக குறைந்து இருக்கும் என்பதை எண்ணி பாருங்கள். இனிமேல் மலையக தமிழர் இங்கே வந்து குடியேற மாட்டார்கள்.

பொது வேட்பாளர் விடயத்தில் தென்னிலங்கை தமிழர்களை சேர்க்காதீர்கள் : மனோ கணேசன் | Not Include South Tamils General Candidate Issue

அங்கே அவர்களுக்கான கட்டமைப்பை தமிழ் முற்போக்கு கூட்டணி ஏற்படுத்தி வருகிறது. ஆகவே தமிழர் ஜனத்தொகை குறையாமல் பாதுகாத்து கொள்ளுங்கள். இன்று தமிழரசு கட்சியின் நிலைமையை கண்டு கவலை அடைகிறேன்.

நீங்கள் இங்கு பலமாக இருந்தால் தான் நாம் அங்கே பலமாக இருப்போம். இதை நான் 20 வருடங்களுக்கு முன் இங்கு வந்து சொன்னேன். 10 வருடங்களுக்கு முன் இங்கு வந்து சொன்னேன். இன்றும் சொல்கிறேன் என கூறியுள்ளார்.

யாழில் வெளிநாட்டவர்களை ஏற்றிச்சென்ற வான் விபத்து

யாழில் வெளிநாட்டவர்களை ஏற்றிச்சென்ற வான் விபத்து

ஐக்கிய தேசியக் கட்சியின் பேரணியில் கலந்து கொள்ள கொழும்பு நோக்கி படையெடுக்கும் மக்கள்

ஐக்கிய தேசியக் கட்சியின் பேரணியில் கலந்து கொள்ள கொழும்பு நோக்கி படையெடுக்கும் மக்கள்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.