அரசாங்கம் ஒரு பக்கமும், உள்ளூராட்சி நிறுவனங்கள் மறு பக்கமும் இருந்தால், முரண்பாடுகள் உருவாகி குழப்பம் ஏற்படும் என மக்கள் விடுதலை முன்னணியில் (ஜே.வி.பி) பொதுச் செயலாளர் டில்வின் சில்வா (Tilvin Silva) தெரிவித்துள்ளார்.
பெலவத்தையில் உள்ள ஜே.வி.பி தலைமை அலுவலகத்தில் இன்று (21) பிற்பகல் நடைபெற்ற சிறப்பு ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
அதன்படி, உள்ளூராட்சி நிறுவனங்களினது அதிகாரத்தையும் நாட்டை வழிநடத்தும் திசைக்காட்டி கொண்டிருப்பது, உள்ளூராட்சி நிறுவனங்கள் நாட்டை வழிநடத்தும் டில்வின் சில்வா சுட்டிக்காட்டியுள்ளார்.
எதிரிகளுக்கு வாய்ப்பு
உள்ளூராட்சி நிறுவனங்களின் அதிகாரம் வேறொரு குழுவிற்கு மாற்றப்பட்டால், அரசாங்கத்தின் பணிகளை நாசப்படுத்த எதிரிகளுக்கு வாய்ப்பு கிடைக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், அரசாங்கத்தின் அரசியல் கலாச்சாரத்தை மாற்றுவதற்கும் அரச சேவைகளுக்கு நிதி ஒதுக்குவதற்கும் நாட்டின் முயற்சிகளை வெற்றிகரமாக முன்னெடுத்துச் செல்வதற்கு உள்ளூராட்சி நிறுவனங்களின் அதிகாரம் மிகவும் முக்கியமானது என்றும் டில்வின் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், திசைக்காட்டி கட்சி ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெற்று மூன்றில் இரண்டு பங்கு வாக்குகளுடன் வலுவான நிலையில் இருந்ததால், உள்ளூராட்சி தேர்தலும் வெல்லப்படும் என்று தான் நம்பிக்கையுடன் இருப்பதாக அவர் மேலும் கூறியுள்ளார்.