தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் பதவிக்கு வந்த பின்னர் மூன்றாவது பிணைமுறி விற்பனை இன்று நடைபெறவுள்ளது
ஜனாதிபதி அநுரகுமார தலைமையிலான தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் பதவிக்கு வந்த பின்னர்.
கடந்த செப்டெம்பர் 25ஆம் திகதி ஒரு இலட்சத்து இருபதாயிரம் மில்லியன் ரூபா பெறுமதியான திறைசேரி பிணைமுறிகளை மத்திய வங்கி ஏலத்தில் விற்பனை செய்திருந்தது.
அதன் பிரகாரம் 91 நாட்கள் முதிர்வுக் காலத்தைக் கொண்ட 70 ஆயிரம் மில்லியன் ரூபா பெறுமதியான பிணை முறிகள், 182 நாட்கள் முதிர்வுக் காலத்தைக் கொண்ட 40 ஆயிரம் மில்லியன் ரூபா பெறுமதியான பிணை முறிகள், 364 நாட்கள் முதிர்வு காலத்தைக் கொண்ட 10 ஆயிரம் மில்லியன் பிணை முறிகள் என்பன இதன் போது ஏலத்தில் விற்பனை செய்யப்பட்டிருந்தன.
திறைசேரி பிணைமுறி
இந்நிலையில் ஒரு மாத காலத்திற்குள்ளாக இன்றைய தினம் இரண்டாவது தடவையாகவும் திறைசேரி பிணைமுறிகளை விற்பனை செய்வதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
இன்றைய தினம் 85 பில்லியன் ரூபா பெறுமதியான திறைசேரி பிணைமுறிகள் விற்பனை செய்யப்படவுள்ளதாக அறியக் கிடைத்துள்ளது.