ராஜபக்சக்களுடன் இணைந்து உழல் மோசடிகளில் ஈடுபட்டது நீங்களே என சாணக்கியனை நோக்கி நாடாளுமன்ற உறுப்பினர் அருண் ஹேமச்சந்திர கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார்.
குறித்த விடயத்தை இன்று (17) இடம்பெற்ற நாடாளுமன்ற அமர்வின் போதே அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர், நாமல் ராஜபக்சவின் நீலப்படையணியில் இருந்துகொண்டு அந்த காலத்தில் இடம்பெற்ற எல்லா விதமான துணைபோன நீங்கள்.
தற்போது இந்த அரசாங்கத்தின் மீது அனைத்து குற்றச்சாட்டுக்களையும் முன்வைக்கின்றீர்கள்” என அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், பலதரப்பட்ட கருத்துக்களை அவர் தெரிவித்திருந்ததுடன் அதற்கு நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியணும் தமது கருத்துக்களை தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
https://www.youtube.com/embed/ncNv6JUCxE4?start=168

