மருதானை காவல் நிலையத்தின் சிறை கூடத்தில் பெண்ணொருவர் தவறான முடிவெடுத்து உயிரிழந்துள்ளார்.
குறித்த சம்பவம் இன்று(22) அதிகாலை இடம்பெற்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
காவல்துறை விசாரணை
மருதானை காவல்துறையினரால் நேற்று(21) கைது செய்யப்பட்ட 32 வயதுடைய பெண்ணொருவரே இதன்போது உயிரிழந்துள்ளார்.
இந்நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.