திருகோணமலை(Trincomalee) – வானெல காவல்துறை பிரிவுக்குட்பட்ட, குளம் ஒன்றிலிருந்து சிவில் பாதுகாப்பு உத்தியோகத்தர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இந்த சடலம் நேற்று(02.01.2025) காவல்துறையினரால் மீட்கப்பட்டுள்ளது.
வான்எல பகுதியைச் சேர்ந்த 40 வயதுடைய கொட்டகெடகே நிரோஷன் என்ற சிவில் பாதுகாப்பு உத்தியோகத்தரெ இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
ஆரம்பகட்ட விசாரணை
அத்துடன், குறித்த நபர் கடந்த செவ்வாய்கிழமை(31.12.2024) மாலை விருந்தொன்றுக்கு சென்று வருவதாக, மோட்டார்
சைக்கிளில் சென்றுள்ளமை ஆரம்பகட்ட விசாரணையிருந்து தெரியவந்துள்ளது.
மேலும், இந்த சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் காவல்துறையினர்
தெரிவித்துள்ளனர்.