முல்லைத்தீவில் (Mullaitivu) குடும்பஸ்தர் ஒருவர் கொலை செய்யப்பட்டு உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
குறித்த சம்பவமானது புதுக்குடியிருப்பு காவல் பிரிவிற்கு உட்பட்ட சுதந்திரபுரம் கொலனி பகுதியில் நேற்று முன்தினம் (02) இடம்பெற்றுள்ளது.
இந்தநிலையில், சுதந்திரபுரம் கொலனி பகுதியினை சேர்ந்த 28
வயதுடைய நாகரத்தினம் சுயதீபன் என்ற குடும்பஸ்தரே இவ்வாறு கொலை செய்யப்பட்டு உயிரிழந்துள்ளார்.
பிரேத பரிசோதனை
குறித்த நபர் நேற்று முன்தினம் (02) தனது நண்பர்களுடன் மது அருந்துவதற்காக சென்றுள்ளதுடன்
அதிக மது அருந்தி மயங்கிய நிலையில் நண்பர்களால் அவரது வீட்டில் விடப்பட்டுள்ளார்.
இதையடுத்து, அவர் விழித்துக்கொள்ளாததினால் மூங்கிலாறு ஆதார மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவர் முன்னரே உயிரிழந்து விட்டதாக தெரியவந்துள்ளதை தொடர்ந்து சடலம் பிரேத பரிசோதனைக்காக முல்லைத்தீவு
மாவட்ட மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.
மேலதிக விசாரணை
அங்கு நேற்றைய தினம் (03) மேற்கொள்ளப்பட்ட சட்ட வைத்திய அதிகாரியின் பிரேத பரிசோதனையின் போது உயிரிழந்தவரின் கழுத்திலுள்ள காயம் அடையாளம் காணப்பட்டு அவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
மேலும், இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.