சட்டவிரோத கடற்றொழிலை நிறுத்துமாறு கோரி வடக்கு மாகாண ஆளுநரிடம்
வடக்கு மாகாண கடற்றொழிலாளர்கள் இணைந்து மனு ஒன்றை கையளித்துள்ளனர்.
குறித்த மனுவை இன்றையதினம் (01.10.2024) வடக்கு மாகாண கடற்றொழிலாளர் இணையம் தீவகப் பகுதி கடற்றொழிலாளர் அமைப்புகள் இணைந்து கையளித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உள்ளூர் சட்டவிரோத இழுவை மடி தொழிலாளர்களால் அனலைதீவு மற்றும் எழுவைதீவு
கடற்றொழிலாளர்கள் தொடர்ந்து பாதிப்படைந்து வருகின்றனர்.
கடற்றொழிலாளர் சங்க உறுப்பினர்கள்
இதன்போது, வடக்கு மாகாண கடற்றொழிலாளர் இணையத்தின் ஊடக பேச்சாளர் அன்னலிங்கம் அன்னராசா, அனலைதீவு கடற்றொழிலாளர் சங்கத்தின் தலைவர் யோன் போஸ்கோ மற்றும் எழுவைதீவு கடற்றொழிலாளர் சங்க உறுப்பினர்கள் ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர்.