களுத்துறை (Kalutara) – இத்தேபான – பகுதியில் உள்ள நீரோடையில் நீராடச் சென்ற பொதுச் சுகாதார பரிசோதகர்கள் இருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
குறித்த இரண்டு பேரும் இன்று (25) பிற்பகல் நீராடச் சென்றபோது நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாகக் தெரியவந்துள்ளது.
மேலதிக விசாரணை
உயிரிழந்த பொதுச் சுகாதார பரிசோதகர்கள் இருவரும் மொரட்டுவ பகுதியைச் சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, தெதுறு ஓயாவில் நீராடச் சென்ற 07 வயது சிறுவர் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்ததுடன், அவருடன் நீராடச் சென்ற ஏனைய இரண்டு பேரும் நீரில் அடித்துச் செல்லப்பட்டுள்ளதாகக் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்த சிறுவனின் சடலம் முக்கலன்யாய வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.