முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

இடைநடுவே கைவிடப்பட்ட பிரசாரம்: வெளியான காரணம்

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் தொடர்பாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினரால் (Tamil National People’s Front) முன்னெடுக்கப்பட்ட பிரசார நடவடிக்கை  இடைநடுவில் கைவிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த சம்பவமானது நேற்று (24) இடம்பெற்றுள்ளது.

இது தொடர்பில் மேலும் தெரியவருகையில், அம்பாறை (ampara) மாவட்டம் திருக்கோவில் காவல்துறை பிரிவிற்குட்பட்ட பகுதிகளில் உள்ள வர்த்தக நிலையங்களுக்கு எதிர்வரும்
ஜனாதிபதித் தேர்தல் தொடர்பிலான தெளிவூட்டும் துண்டு பிரசுரம் வழங்கும் நிகழ்வொன்று தமிழ் தேசிய மக்கள் முன்னணி கட்சியினரால் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி

இதன்போது, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி ஜனாதிபதித் தேர்தலைப் புறக்கணிக்குமாறு கோரி வடக்கு – கிழக்கில் துண்டுப்பிரசுரம் வழங்கும் செயற்பாட்டில் ஈடுபட்டுள்ளதை ஏற்க முடியாது என அம்பாறை (Ampara) – திருக்கோவில் பகுதியில் துண்டுப்பிரசுரம் வழங்கும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தரப்பினருக்கு எதிராக காவல்துறையினர் இடையூறு விளைவித்துள்ளனர்.

இடைநடுவே கைவிடப்பட்ட பிரசாரம்: வெளியான காரணம் | Police Halt Tnpf Campaign Complaint Filed

அத்துடன் சம்பவ இடத்திற்கு வந்த திருக்கோவில் பொறுப்பதிகாரி தேர்தலை புறக்கணிக்க கோருவது சட்டவிரோதம் எனவும் நல்லிணக்கத்தோடு உள்ள திருக்கோவில் பகுதியில் இவ்வாறான நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டாம் எனவும் அறிவுறுத்தியுள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர்

இதன்போது இரு தரப்புக்கும் இடையில் வாக்குவாதம் ஒன்று இடம்பெற்றுள்ள நிலையில், இதற்கு பதிலளித்த, நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரன் தேர்தல் விஞ்ஞாபனங்களில் தமிழ் மக்களுக்கு முறையான தீர்வு கிடைக்க வேண்டும் என்பதையே தாம் வலியுறுத்தியதாகவும், குறித்த பிரசாரத்தை இப்பகுதி மக்கள் விரும்பவில்லை எனவும் கூறியுள்ளார்.

இடைநடுவே கைவிடப்பட்ட பிரசாரம்: வெளியான காரணம் | Police Halt Tnpf Campaign Complaint Filed

அத்துடன், குறித்த சம்பவம் தொடர்பில் தேர்தல் திணைக்களத்தில் முறைப்பாடு செய்வதற்கான
நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மாவட்ட அமைப்பாளர் புஸ்பராஜ் துஷானந்தன் தலைமையில் இடம்பெற்ற குறித்த நிகழ்வில், கட்சியின் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வராஜா கஜேந்திரன் (S. Kajendran) தேசிய அமைப்பாளர் தர்மலிங்கம் சுரேஸ் உள்ளிட்ட பலரும் ஈடுபட்டிருந்தமை மேலும் குறிப்பிடத்தக்கது.

GalleryGalleryGalleryGallery

Source: https://ibctamil.com/article/police-halt-tnpf-campaign-complaint-filed-1724555926

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.